300 புதிய பொருட்களை அறிமுகப்படுத்தும் ஃபேர்பிரைஸ்

1 mins read
1b2159e3-8b8e-41f9-b0a6-c8562d8edbb8
என்டியுசி ஃபேர்பிரைஸ் பேரங்காடி அடுத்த ஓராண்டு காலகட்டத்தில் விற்பனைக்காக 300 புதிய பொருட்களைச் சேர்க்கவிருக்கிறது. படம்: என்டியுசி ஃபேர்பிரைஸ் -

என்டியுசி ஃபேர்பிரைஸ் பேரங்காடி அடுத்த ஓராண்டு காலகட்டத்தில் விற்பனைக்காக 300 புதிய பொருட்களைச் சேர்க்கவிருக்கிறது.

அவற்றில் 30 பொருட்களைத் தீவு முழுவதும் உள்ள அனைத்து ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளிலும் அந்நிறுவனம் நேற்று அறிமுகப்படுத்தியது.

அவற்றில் கனோலா எண்ணெய், 'தாய் ஹோம் மாலி' அரிசி, கிரீன் டீ, ஓட்ஸ், பெரியவர்களுக்கான டயப்பர் உள்ளிட்ட பொருட்கள் அடங்கும்.

வெவ்வேறு சின்னங்களைக் கொண்ட 2,000க்கும் அதிகமான சொந்த தயாரிப்பு பொருட்களை ஃபேர்பிரைஸ் விற்பனை செய்கிறது.

புதிய சொந்த தயாரிப்பு பொருட்களைத் தயாரிக்க, அடுத்த ஆண்டு இரண்டாம் காலாண்டிற்குள் வாடிக்கை ஆலோசனைக் குழு ஒன்றைத் தான் அமைக்கவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

ஜப்பான், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இத்தாலி, கனடா உட்பட 55க்கும் அதிகமான நாடுகளிலிருந்து அதன் சொந்த தயாரிப்பு பொருட்களை ஃபேர்பிரைஸ் தருவிக்கிறது.

மற்ற சின்னங்களைக் கொண்ட பொருட்களின் விலையுடன் ஒப்புநோக்க, சொந்த தயாரிப்பு பொருட்களின் விலை 10 முதல் 20 விழுக்காடு வரை குறைவாக இருக்கும் என அந்நிறுவனம் கூறியது.