தீவு விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் எங் நியோ அவென்யூ துணைச் சாலையில் நேற்று மாலை 4 மணியளவில் சிறிய பேருந்து ஒன்று பக்கவாட்டில் சாய்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் காயமடைந்த அப்பேருந்தின் 57 வயது ஓட்டுநர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு சுயநினைவுடன் கொண்டு செல்லப்பட்டார்.
அப்பேருந்து விபத்துக்கு உள்ளானதை அடுத்து ஏறத்தாழ 10 பேர் அந்த வாகனத்துக்கு பக்கத்தில் திரண்டு நின்றதாக ஷின் மின் சீன நாளிதழ் குறிப்பிட்டது. ஆனால், அவர்கள் அப்பேருந்தின் பயணிகளா என்பது தெரியவில்லை.
காயமடைந்த மேலும் மூவரை மருத்துவ உதவியாளர்கள் பரிசோதித்தனர் என்றும் மருத்துவமனைக்குச் செல்ல அவர்கள் மறுத்துவிட்டதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

