$1.9 மில்லியன் மோசடி: 94 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் முன்னாள் வங்கி ஊழியர்

$1.9 மில்லியன் மோசடி: 94 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் முன்னாள் வங்கி ஊழியர்

1 mins read
55859031-bbdb-46ed-a83e-7afd1291fea0
-

வங்கிகளில் $1.9 மில்லியன் மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் மூத்த வங்கி ஊழியர் ஒருவர் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஹான் டிலாங், 33, எனப்படும் அவர் 94 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். அவற்றில் நல்ல பணத்தை கள்ளப் பணமாக மாற்றுவது தொடர்பான 65 குற்றச்சாட்டுகளும் அடங்கும். இவை தவிர 11 மோசடிக் குற்றங்கள், ஆறு நம்பிக்கை மோசடிக் குற்றங்கள் ஆகியனவும் அவர் மீது சுமத்தப்படும். 2015 பிப்ரவரிக்கும் கடந்த ஆண்டு ஏப்ரலுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் அவர் மோசடி, கையாடல் குற்றங்களில் ஈடுபட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

யுஓபி, ஓசிபிசி வங்கிகளில் நிரந்தர வைப்புத் தொகையாக வைக்கப்படும் என்று கூறி அவர் நிதியைக் கையாடியதாகக் கூறப்படுகிறது. ஆனால் குற்றங்களில் ஈடுபட்டபோது அவர் எங்கு பணியாற்றினார் என்று தெரிவிக்கப்படவில்லை. $600,000 பிணையில் ஹான் வெளியில் விடப்பட்டுள்ளார். வரும் 22ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.