பொது இட மரங்களில் பழம் பறிக்க அனுமதி பெறவேண்டும்

அரசாங்க நிலங்களில் உள்ள மரங்களில் இருந்து கீழே விழும் பழங்களை எடுப்பதற்கும் அவற்றை மரங்களிலிருந்து பறிப்பதற்கும் அனுமதி பெற வேண்டும். தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் இதனை நாடாளுமனறத்தில் தெரிவித்தார். பொது இடங்களில் உள்ள மரங்களின் பழங்கள் யாருக்குச் சொந்தம் என்று மன்ற உறுப்பினர் டேரில் டேவிட் எழுப்பிய வினாவுக்கு அமைச்சர் எழுத்து மூலம் பதில் அளித்தார்.

“அரசு நிலத்தில் வளரும் மரங்களும் அவற்றின் பழங்களும் அரசுக்கே சொந்தம். அந்த மரங்களில் பெரும்பாலானவற்றை தேசிய பூங்காக் கழகம் பராமரிக்கிறது. அவற்றில் உள்ள பழங்களைப் பறிக்க விரும்பினாலோ அந்த மரங்க ளிலிருந்து கீழே விழுந்த பழங்களை எடுக்க விரும்பினாலோ அதற்கான அனுமதியைப் பெற கழகத்தை பொதுமக்கள் நாடவேண்டும்,” என்று திரு வோங் தெரிவித்தார். அனுமதி பெறாமல் பழங்களை எடுப்போருக்கும் பறிப்போருக்கும் $5,000 வரையிலான அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Loading...
Load next