சைக்கிள்-பேருந்து விபத்து ; மருத்துவமனையில் ஆடவர்

சைக்கிள்-பேருந்து விபத்து ; மருத்துவமனையில் ஆடவர்

1 mins read
b70146fe-7f7f-4728-8fdc-dba7a85f1e6e
-

எஸ்எம்ஆர்டி பேருந்துடன் சைக்கிள் மோதிய சம்பவத்தில் சைக்கிளோட்டி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

செம்பவாங் வேக்கும் செம்பவாங் டிரைவுக்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் நிகழ்ந்த இந்த விபத்து பற்றிய தகவல் போலிசாருக்கு திங்கட்கிழமை (அக்டோபர் 7ஆம் தேதி) பிற்பகல் சுமார் 4.30 மணிக்குக் கிடைத்தது.

காயமடைந்த 30 வயது சைக்கிளோட்டி சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

விபத்து குறித்து போலிசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்