தோட்டாக்கள் நிறைந்த துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது

தோட்டாக்கள் நிறைந்த துப்பாக்கி ஒன்றைத் தங்கள்வசம் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான இரண்டு ஆடவர்களில் ஒருவருக்கு 24 வயது, மற்றொருவருக்கு 25 வயது. அவர்கள் போதைப்பொருள் குற்றங்களைச் செய்திருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

24 வயது சந்தேக நபரை போலிசார் நேற்று முன்தினம் ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 72ல் கைது செய்தனர்.  இரண்டாவது சந்தேக நபர் நேற்று  அதிகாலை 2.25 மணிக்கு கைது செய்யப்பட்டார். அவர்களது துப்பாக்கி ‘சீஹாக்’ ரகத்தைச் சேர்ந்தது என நம்பப்படுகிறது.

சிங்கப்பூரர்களான அவர்கள் இருவரும் நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவர். விசாரணை தொடர்கிறது.

துப்பாக்கியைச் சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றத்திற்காக  குறைந்தது ஐந்து ஆண்டு சிறைத்தண்டனையுடன்  ஆறு அல்லது அதற்கும் அதிகமான பிரம்படிகள் விதிக்கப்படலாம்.