பராக் ஒபாமா, மிஷெல் ஒபாமா சிங்கப்பூர் வருகின்றனர்

பராக் ஒபாமா, மிஷெல் ஒபாமா சிங்கப்பூர் வருகின்றனர்

1 mins read
0cc1f4be-24bd-4352-b575-9286829d6331
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும் அவரது மனைவி மிஷெல் ஒபாமாவும் சிங்கப்பூரில் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள விருக்கின்றனர். கோப்புப் படம்: பராக் ஒபாமா இஸ்டகிராம் -

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும் முன்னாள் தலை மகள் மிஷெல் ஒபாமாவும் இவ்வாண்டு இறுதியில் சிங்கப்பூரில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்றவிருக்கின்றனர்.

டிசம்பரில் நடக்கும் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் அவர்கள் இருவரும் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்துகொள்வர் என்று நேற்று ெவளியிட்ட அறிக்கையில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ள 'குரோத் ஃபெகல்டி' தெரிவித்தது.

சிங்கப்பூரில் முதல் பொது வர்த்தக நிகழ்ச்சியில் ஒபாமா பங்கேற்பார். அப்போது தம்முடைய அதிபர் அனுபவத்தையும் தலைமைத்துவத்தை பற்றி பேசுவார் என அந்த அறிக்கை கூறியது.

இந்த நிகழ்ச்சி டிசம்பர் 16ஆம்தேதி சிங்கப்பூர் எக்ஸ்போவில் காலை 11.30 மணியிலிருந்து பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறும்.

இதில் உயர்மட்டத் தலைவர்களுடன் கலந்துரையாடலும் இடம்பெறும்.

இதற்கான நுழைவுக் கட்டணம் S$295 முதல் S$1,195 வரையில் இருக்கும்.

மற்றொரு நிகழ்ச்சியில் தம்முடைய வாழ்க்கையை வடிவமைத்த நிகழ்வுகளைப் பற்றி மிஷெல் ஒபாமா பேசுவார்.

இந்த நிகழ்ச்சி டிசம்பர் 14ஆம் தேதி சிங்கப்பூர் எக்ஸ்போவில் இரவு 7.30 மணியிலிருந்து இரவு 9.00 மணி வரை நடைபெறும்.

இதற்கான நுழைவுக் கட்டணம் S$295 முதல் S$795 வரையில் இருக்கும்.