யூனோஸ் லிங்க் வாகன விபத்து; 58 வயது மாது காயம்

யூனோஸ் லிங்கிற்கும் ஊபி அவென்யூ 3க்கும் இடையிலான சாலை சந்திப்பில் மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாயின. விபத்து குறித்து புதன்கிழமை (அக்டோபர் 9) பிற்பகல் 4.14 மணிக்கு போலிசாருக்குத் தகவல் கிடைத்தது.

 

இந்த விபத்தில் காயமடைந்த 58 வயது பெண் சாங்கி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக அவர்கள் கூறினர்.விபத்து நடந்தபோது அருகில் இருந்த ஸ்டாம்ப் செய்தித்தள வாசகர் ஃபிராங்கி, தனது காரின் உள் கேமராவிலிருந்து எடுக்கப்பட்ட காணொளியை அந்தச் செய்தித்தளத்திடம் பகிர்ந்தார்.

சாலையில் வலது பக்கம் திரும்பிக்கொண்டிருந்த அந்தக் காரை இரண்டு கார்கள் மோதியதை அந்தக் காணொளி காட்டுகிறது.முதலாவது கார் விதிமுறைகளுக்குப் புறம்பாக வலப்பக்கம் திரும்பியது என நம்புவதாக ஃபிராங்கி தெரிவித்தார்.