சம்பள பாக்கி வைக்கும் நிறுவனங்களை கண்காணிக்கும் மனிதவள அமைச்சு

சம்பள பாக்கி வைக்கும் நிறுவனங் களைக் கண்காணித்துவரும் மனிதவள அமைச்சு, அத்தகைய நிறுவனங்கள் குறித்த நேரத்தில் சம்பளம் வழங்குவது பற்றிய அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியருக்கான தீர்வையை தாமதமாக செலுத்துதல், நிதி நெருக்கடி போன்ற தகவல்களை பகுப்பாய்வு செய்து சம்பள பாக்கி வைக்கும் முதலாளிகளை அமைச்சு அடையாளம் கண்டுபிடித்துள்ளது.

அத்தகைய நிறுவனங்களுக்கு காலாண்டுக்கு ஒரு முறை 200க்கு மேற்பட்ட கடிதங்களை எழுதியுள்ள அமைச்சு, குறித்த நேரத்தில் சம்பளம் வழங்குவது பற்றிய விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

குறித்த நேரத்தில் சம்பளம் வழங்கப்படுவதாக நிறுவனங்கள் அறிவித்த பிறகு ஊழியர்கள் புகார் தெரிவித்தால் பொய்யானத் தகவல் அளித்ததற்காக அந்த நிறுவனத் தின் அமைச்சு நடவடிக்கை எடுக் கிறது. 

சம்பள பாக்கி வைக்கும் நிறுவனங்களுக்கு எதிராக நேரடி சோதனைகளைத் தவிர பல்வேறு அம லாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு அறிமுகமான முன்னோடித் திட்டத்தில் நூறு நிறுவனங்கள் தொடர்பான சோதனையில் நான்கு நிறுவனங்கள் 123 சம்பள பாக்கி சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதையடுத்து TADM எனும் சச்சரவு நிர்வாகத்துக்கான முத்தரப்புப் பங்காளித்துவக் குழு 300,000 வெள்ளி சம்பள பாக்கியை மீட்டது.

ஊழியர் வேலை நேரம் போன்ற சட்டப்படி தேவையான ஆவணங்களை நிறுவனங்கள் வைத்திருப்பதும் புதிய அமலாக்க நடவடிக்கைகளில் ஒன்று.

சச்சரவு நிர்வாகத்துக்கான முத்தரப்பு பங்காளித்துவக் குழுவின் பொது நிர்வாகியான கந்தவேல் பெரியசாமி, ஒவ்வொரு சம்பவத்தையும் ஆராய்ந்து அதன் அடிப் படையில் தவறுகளின் தன்மை நிர்ணயிக்கப்படுகிறது என்றார்.

உதாரணமாக, சம்பளம் வழங்கிய பிறகும் சம்பளச் சீட்டை வழங்காத நிறுவனங்களுக்கு புதிய வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதற்குத் தடை விதிக்கப்பட்டதால் அது ஊழியர்களையே பாதிக்கும் என்று நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர்  விவரித்தார்.

மனிதவள அமைச்சு மற்றும் சச்சரவு நிர்வாகத்துக்கான முத்தரப்புப் பங்காளித்துவக் குழு தயாரித்த வேலைவாய்ப்பு தர அறிக்கை வெளியிடுவதற்கு முன்பு அவர் பேசினார். 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து வேலையிடப் பிரச்சினைகளை அறிக்கை ஆராய் கிறது.

அந்த காலக்கட்டத்தில் அமைச்சு, சச்சரவு நிர்வாகத்துக்கான முத்தரப்பு பங்காளித்துவம் ஆகியவற்றிடம் மொத்தம் 17,038 கோரிக்கைகள், விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இவற்றில் 87 விழுக்காடு சம்பளம் தொடர்பானவை.

கடந்த இரண்டு ஆண்டுகளில் சம்பளம் தொடர்பான கோரிக்கை சரிசமமாக இருந்தது. 

2018ல் ஆயிரம் ஊழியர்களுக்கு 2.42 பேரும் 2017ல் ஆயிரம் ஊழியர்களுக்கு 2.49 பேரும் கோரிக்கைளை சமர்ப்பித்திருந்தனர்.