மலேசிய சோதனைச் சாவடியில் நெரிசலைக் குறைக்க முயற்சி

சிங்கப்பூரையும் மலேசியாவையும் இணக்கும் இரு குடி நுழைவுச் சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து நெரி சலைக் குறைக்க மலேசியா முயற்சி எடுக்கவுள்ளது. இதற்காக மலேசிய அரசு கிட்டத்தட்ட S$28 மில்லியனைச் செலவிடும் என்று அந்நாட்டு நிதி அமைச்சர் லிம் குவான் எங் நேற்று தெரிவித்தார்.

இதன் பொருட்டு துவாஸ் சோதனைச் சாவடியிலும் ஜோகூர் பக்கம் உள்ள சோதனைச் சாவடியிலும் மேலும் 50 மோட்டார் சைக்கிள் வழித்தடங்கள் அமைக்கப்படும். தற்போது அங்கு எத்தனை மோட்டார் சைக்கிள் வழித் தடங்கள் உள்ளன என்பதை திரு லிம் தெரிவிக்க வில்லை. எனினும் சிங்கப்பூருக்கும் ஜோகூருக்கும் இடையே தினமும் 300,000க்கும் மேற்பட்ட மலேசியர்கள் பயணம் செய்கிறார்கள் என்று அவர் கூறினார்.

மேலும் ஜோகூர் பாருவிலிருந்து சிங்கப்பூர் செல்லும் ‘ஆர்டிஎஸ்’ விரைவு ரயில் திட்டத்தைத் தொடர மலேசிய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் திரு லிம் கூறினார்.

சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் முதல் ஜோகூரின் புக்கிட் சகார் வரை, S$1.3 பில்லியன் செலவிலான 4 கிலோ மீட்டர் நீளமுள்ள விரைவு ரயில் திட்டத்தை மேற்கொள்ள இரு நாடுகளும் கடந்த ஆண்டு ஒப்பந்தம் செய்துகொண்டன. இந்தத் திட்டம் தொடங்க மலேசியா அவகாசம் கேட்டது. இந்த கால அவகாசம் இம்மாதத்துடன் முடிவடைகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!