சுடச் சுடச் செய்திகள்

முன்னாள் அதிகாரிக்குச் சிறை

உறவினரைப் போன்று பலமுறை கையெழுத்துகளைப் போட்டு அவரது வங்கிக் கணக்கிலிருந்து 2.2 மில்லியன் வெள்ளிக்கு மேல் களவாடிய முன்னாள் வங்கி நிர்வாகிக்கு நேற்று இரண்டரை ஆண்டு் தண்டனை விதிக்கப்பட்டது.

2011 ஜனவரியிலிருந்து அக்டோபர் 2015ஆம் ஆண்டு வரை யுஓபி வங்கியில் பணியாற்றிய திமத்தி டான் சுவி தியாம், 33, தனக்கு நிர்ணயிக்கப்பட்ட விற்பனை இலக்கை எட்டுவதற்காக இந்தக் குற்றச் செயல்களைப் புரிந்தார். கடந்த மார்ச் 19ஆம் தேதி அவர் மீது ஐந்து குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஏமாற்றியது, கணினியை தவறாகப் பயன்படுத்தியது, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக் கொண்டார். மேலும்          23 குற்றச்சாட்டுகள் கவனத்தில் கொள்ளப்பட்டன.