'கீழே விழுந்தாலும் எவ்வளவு விரைவாக மீண்டெழுகிறோம் என்பதுதான் முக்கியம்'

'கீழே விழுந்தாலும் எவ்வளவு விரைவாக மீண்டெழுகிறோம் என்பதுதான் முக்கியம்'

1 mins read
d3517509-714c-49e9-813a-2006b57d0453
-

கீழே விழுந்தாலும் அதிலிருந்து எவ்வளவு விரைவாக மீண்டெழுகிறோம் என்பதுதான் முக்கியம் என்று தமது தந்தை திரு சண்டோக் சிங் கற்றுக்கொடுத்த பாடம்தான் தமக்கு இன்று வரை வழிகாட்டுதலாக இருந்து வந்துள்ளது என்றார் 26 வயது டாக்டர் ஈஷ்வர்பால் சிங் க்ரெவால்.

இளம் சீக்கிய சங்கம் நேற்று நடத்திய வருடாந்திர சீக்கிய பட்டதாரிகளுக்கான தேநீர் விருந்தில் டாக்டர் சிங் பேசினார். காலஞ்சென்ற திரு சண்டோக் சிங், தி நியூ பேப்பர் நாளிதழின் செய்தி ஆசிரியராகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் செய்தியாளராகவும் பணியாற்றியவர். டாக்டர் ஈஷ்வர்பால் சிங் இந்த ஆண்டு நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தின் லீ கோங் சியான் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றார். தற்காப்பு, வெளியுறவு மூத்த துணை அமைச்சர் டாக்டர் மாலிக்கி ஒஸ்மான், சீக்கிய பட்டதாரிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.