$575,000 மசேநி பணத்தைத் திருப்பித்தருமாறு முன்னாள் மனைவிக்கு நீதிமன்றம் உத்தரவு

காலஞ்சென்ற முன்னாள் கணவருக்குச் சொந்தமான $575,000க்கு மேலான மத்திய சேமநிதி (மசேநி) பணத்தைத் திருப்பித் தருமாறு சிங்கப்பூர் மாது ஒருவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரது முன்னாள் கணவர் தனது மசேநி சேமிப்பின் வாரிசாக முன்னாள் மனைவியை நியமித்திருந்தபோதிலும், அவரது இரண்டாவது திருமணம் அந்த நியமனத்தை ரத்து செய்துவிட்டதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், அவரது இரண்டாவது மனைவியும் அந்தப் பணத்தைப் பெறத் தகுதிபெறமாட்டார் என்றும் உயர்நீதிமன்றம் தீர்மானித்தது. கனடாவில் வசிக்கும் பிலிப்பினோவான இரண்டாவது மனைவி, இஸ்லாமிய சட்ட ஆலோசனையின்படி இஸ்லாமிய சமயத்தை இப்போது கடைப்பிடிக்கவில்லை என்பது இதற்கான காரணம்.

மசேநி பணத்தைப் பெற்றுக்கொண்ட முதல் மனைவி, காலமானவரின் சொத்து நிர்வாகியிடம் $575,735 பணத்தை முழுமையாகத் திருப்பித் தரவேண்டும் என்றும், அந்தப் பணம் இஸ்லாமிய சட்டத்தின்படி பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. முதல் மனைவி திருவாட்டி மமுவா நயிம் தனது சட்ட நிறுவனத்திற்கு மசேநி பணத்திலிருந்து செலுத்திய கட்டணத்தை சட்ட நிறுவனம் திருப்பித் தரவேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்தில் சென்ற மாதம் தாக்கல் செய்யப்பட்ட உத்தரவில் நீதிபதி ஆன்ட்ரூ ஆங் உத்தரவிட்டிருந்தார்.

திரு சம்சுதின் முகம்மது என்பவர் 1985ஆம் ஆண்டு தனது மனைவி திருவாட்டி மமுவாவைத் தனது மசேநி பணத்தின் வாரிசாக நியமித்திருந்தார். பிள்ளைகள் இல்லாத அந்தத் தம்பதியர் 1989ஆம் ஆண்டு ஜூன் மாதம் விவாகரத்து செய்தனர்.

பிற்பாடு, 13 ஆண்டுகளுக்குப் பிறகு கனடாவின் டொரொன்டோ நகரில் திருவாட்டி லியோனிசா அச்சா வெலசெரா என்பவரைத் திரு சம்சுதின் மறுமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான்.

திரு சம்சுதின் 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். அவரது சொத்தை நிர்வகிக்கும் பொறுப்பு சிங்கப்பூரிலிருந்த அவரது சகோதரி திருவாட்டி ஹமிடா ஹனிஃபிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அவர் இறந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு, மத்திய சேமநிதிக் கழகம் திருவாட்டி மமுவாவிடம் அவர் வாரிசாக நியமிக்கப்பட்டிருந்த விவரத்தைத் தெரியப்படுத்தியது. திருவாட்டி மமுவா 2016 ஜனவரியில் மசேநி பணத்தைப் பெற்றுக்கொண்டார். அதே ஆண்டு மார்ச் மாதத்திற்குள், வெறும் $117 மட்டுமே மீதமிருந்தது.

இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பத்திரங்களின்படி, திருவாட்டி மமுவாவுக்கு மசேநி பணம் கிடைத்த பிறகே திரு சம்சுதினின் இரண்டாவது திருமணம் பற்றி மசேநி கழகத்திடம் தெரியப்படுத்தப்பட்டதாக திருவாட்டி மமுவா கூறியிருந்தார்.

திரு சம்சுதின் தனது நியமனத்தை ரத்து செய்யவில்லை என்றும், அவருடன் தொடர்பில் இல்லாததால் அவர் கனடாவில் மறுமணம் செய்தது தனக்குத் தெரியாது என்றும் திருவாட்டி மமுவா கூறினார். ஆனால், தனது சகோதரனின் இரண்டாவது திருமணத்தால் மசேநி நியமனம் செல்லாது என்று திருவாட்டி ஹமிடா நீதிமன்றத்தில் வாதாடினார். இஸ்லாமிய சட்டத்தின்படி, அவரது சொத்தின் உண்மையான வாரிசுகளில் அவரது தாயும் ஐந்து உடன்பிறப்புகளும் உள்ளடங்குவதாகவும் அவர் சொன்னார்.

நீதிமன்றம் திரு சம்சுதினின் இரண்டாவது திருமணத்தை ஏற்றுக்கொண்டு, திருவாட்டி மமுமா மசேநி பணத்தின் வாரிசாக நியமிக்கப்பட்டதை ரத்து செய்தது. ஆனால், இஸ்லாமிய சட்டத்தின்படி திருமணம் செய்திருந்த இரண்டாவது மனைவி திருவாட்டி லியோனிசா, பிற்பாடு இஸ்லாமிய சமயத்தைக் கைவிட்டதாகத் தெரிய வந்தது. இதுபற்றி இஸ்லாமிய சமய மன்றத்தை நீதிமன்றம் ஆலோசித்தபோது, திருவாட்டி லியோனிசா இஸ்லாத்தைக் கைவிட்டதால் அவரது திருமணம் செல்லாது என்று மன்றம் கூறியது. திரு சம்சுதினின் மகனுக்கும் எந்த வாரிசு உரிமையும் இல்லை.

இந்நிலையில், திருவாட்டி மமுவா மசேநி பணம் முழுவதையும் சொத்து நிர்வாகியிடம் திருப்பிக் கொடுக்கவேண்டும் என நீதிபதி ஆங் உத்தரவிட்டார். இதுவரை 70,000 வெள்ளிக்கு மேலாக மீட்கப்பட்டிருக்கிறது. திருவாட்டி மமுமா தனது சட்ட நிறுவனத்திற்குச் செலுத்திய 30,000 வெள்ளியும் இதில் உள்ளடங்கும். சொத்து நிர்வாகியான திருவாட்டி ஹமிடாவுக்கு 6,000 சட்டச் செலவைத் தரும்படியும் அவருக்கு உத்தரவிடப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!