நவம்பர் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் சற்று குறைவான வாகன உரிமைச் சான்றிதழ்கள் (சிஓஇ) வழங்கப்படும் என நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, இந்த காலகட்டத்தில் மாதம் ஒன்றுக்கு ஏறத்தாழ 4,813 சிஓஇ வழங்கப்படும். தற்போது வழங்கப்படும் 4,904 சிஓஇ-ஐவிட இது 1.9 விழுக்காடு குறைவு.
மாதம் ஒன்றுக்கு 1,600 சிசி மற்றும் 130bhp வரையிலான கார்களுக்கான சிஓஇ எண்ணிக்கை தற்போது வழங்கப்படும் 2,112லிருந்து மாதத்திற்கு 2,036ஆக குறைக்கப்படும். 1,600cc மற்றும் 130bhpக்கும் அதிகமான கார்களுக்கான சிஓஇ எண்ணிக்கை தற்போதைய 2,083லிருந்து 2,023ஆக குறையும். மோட்டார்சைக்கிள்களுக்கான சிஓஇ 1,477லிருந்து 1,382ஆக குறைக்கப்படும்.
ஆனால், பொதுப் பிரிவில் சற்று கூடுதலான சிஓஇ வழங்கப்படும். அப்பிரிவில் 754 சிஓஇ வழங்கப்படும். தற்போது 709 சிஓஇ வழங்கப்படுகிறது. அதேபோல, வர்த்தக வாகனங்களுக்கான சிஓஇ எண்ணிக்கை தற்போது உள்ள 566லிருந்து 635ஆக அதிகரிக்கும்.

