‘ரயில் பராமரிப்புக்கு போதுமான முதலீடு செய்யப்படவில்லை’

ஆரம்பக் காலத்தில் பராமரிப்புச் செலவுகளுக்கு ரயில்வே நிறுவனங்கள் போதுமான முதலீடுகளை செய்யவில்லை என்பதை போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் வருங்காலத்தில் அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்று அவர் கூறினார்.

ரயில்வே துறையை ஒழுங்குபடுத்தும் அமைப்பான நிலப் போக்குவரத்து ஆணையத்தின் பாரபட்சமான விதிமுறைகள் குறித்தும் அவர் எச்சரித்தார். ரயில்வே துறையுடன் நெருக்கமாகச் செயல்படும் ஒழுங்குபடுத்தும் அமைப்புகள் வாடிக்கையாளர் நலன்களைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். ஆனால் பாரபட்சமான விதிமுறைகளால் வாடிக்கையாளர்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஹாம்ப்ஷயர் ரோட்டில் உள்ள தலைமையகத்தில் பராமரிப்பு உள்கட்டமைப்பு தொடர்பான 8வது கருத்தரங்கில் அமைச்சர் கோ பூன் வான் பேசினார்.
அப்போது செலவுகள் கட்டுபடியாகக்கூடிய வகையில் இருக்க வேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

“நம்பகமான ரயில் சேவைக்கு கணிசமான முதலீடுகள் தேவைப்படுகின்றன.
“காலம் கடந்த பழைய சொத்துகளை மாற்றுவதற்கும் நடைமுறை மற்றும் பராமரிப்புக்கும் போதுமான நிதி ஒதுக்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

“ரயில் பிரச்சினைகளை சமாளிக்க ஒருங்கிணைந்த முயற்சி தேவை,” என்றார் அவர்.
“சிக்கலான ரயில்வே கட்டமைப் புக்கு தெளிவான போக்குவரத்து தீர்வுகள் அவசியம். ஆனால் 2012ல் இருந்ததைவிட தற்போது ரயில்வே சேவையின் நம்பகத்தன்மை கூடியுள்ளது.

“போக்குவரத்து அமைச்சு, நிலப் போக்குவரத்து ஆணையம், எஸ்எம்ஆர்டி, எஸ்பிஎஸ் டிரான்சிட் அல்லது சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் என பல தரப்பட்டவர்கள் பங்கு இருந்தாலும் நம்பகமான, பாதுகாப்பான, கட்டு படியாகக்கூடிய ரயில் சேவைகளை வழங்குவதற்கான பொதுவான இலக்கை நாம் பகிர்ந்து கொள்கிறோம்.

“நமது பங்கு வேறுபட்டு இருந்தாலும் நமது பொதுவான வாடிக்கையாளர்கள், சிங்கப்பூர் பயணி கள்தான்,” என்று அமைச்சர் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!