இரவு விடுதிகளுக்கான கண்காணிப்புக் குழு

இரவு விடுதிகளுக்கான கண்காணிப்புக் குழு

1 mins read
4b84e84d-0933-4fec-9fb1-cd0a7d35e3ef
-

சிங்கப்பூரின் இரவு நேர கேளிக்கை விடுதிகள் ஒன்று சேர்ந்து போலிசுடன் இணைந்து தொழில்துறை அளவில் பாதுகாப்பு, கண்காணிப்புக் குழுவை அமைத்துள்ளது. குற்றங்களைத் தடுப்பது, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை அமல்படுத்துவது ஆகியவை இக்குழுவின் முக்கிய பணியாக இருக்கும் என்றார் உள்துறை அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின் (படம்).

இரவு விடுதிகளில் கலவரங்கள், கடுமையான காயம் விளைவித் தல் போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டில் இத்தகைய 36 சம்ப வங்கள் நிகழ்ந்தன. இந்த ஆண் டின் முதல் எட்டு மாதங்களில் அந்த எண்ணிக்கை 56க்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இத்தகைய முதல் குழு அமைந்தது.