ஈசூன் நடைபாதையில் கார் ஓட்டிய ஆடவர் கைது

ஈசூன் நடைபாதையில் கார் ஓட்டிய ஆடவர் கைது

1 mins read
4b3303da-aa0b-4d5d-9d78-a7cf20968758
-

திங்கட்கிழமை இரவு (அக்டோபர் 14) ஈசூன் நடைபாதையில் தனது காரை ஓட்டிச்சென்ற ஆடவர், குடிபோதையில் ஓட்டியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தைக் காணொளி எடுத்த ஒருவர் ஸ்டாம்ப் செய்தித்தளத்துடன் அதனைப் பகிர்ந்து கொண்டார். சிவப்பு நிறக் கார் ஒன்று நடைபாதையிலும் புல்தரையிலும் செல்வதைக் காணொளி காட்டுகிறது.

இதுபற்றி ஸ்டாம்ப் போலிசாரிடம் கேட்டபோது, ஈசூன் அவென்யூ 2ன் அடுக்குமாடிக் கட்டடம் 201ல் நடந்த சம்பவம் பற்றி இரவு 11.22 மணிக்குத் தகவல் கிடைத்ததாகவும், அந்தக் காரின் ஓட்டுநர் பிற்பாடு கைது செய்யப்பட்டதாகவும் போலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. போலிசார் சம்பவத்தை விசாரிக்கின்றனர்.