தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் தலைவராக தொடரும் மேரி லியூ

தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் தலைவராக தொடரும் மேரி லியூ

1 mins read
a71cd9c9-5a6f-4380-8f58-82c2fb6f895b
-

தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) தலைவராக 56 வயது திருவாட்டி மேரி லியூ (படம்) தொடர்கிறார். முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினரான இவர், 2015ஆம் ஆண்டில் என்டியுசி தலைவராக முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு முன்னதாக என்டியுசி தலைவர் பொறுப்பைத் திருவாட்டி டயானா சியா வகித்தார். அவரிடமிருந்து திருவாட்டி லியூ அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

சிங்கப்பூர் கடல்துறை அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளரான திருவாட்டி லியூவை 21 உறுப்பினர்கள் கொண்ட புதிய மத்தியக் குழு ஒன்று மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுத்தது.

இந்நிலையில், பிரதமர் அலுவலக அமைச்சர் இங் சீ மெங், என்டியுசி தலைமைச் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். என்டியுசியில் தலைவர் மற்றும் தலைமைச் செயலாளர் பொறுப்புகளே இரு ஆக உயரிய பொறுப்புகளாகும்.