பாசிர் ரிஸ் : சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்களுடன் மோதிய வெள்ளி நிற கார்

லோயாங் அவென்யூவை நோக்கிச் செல்லும் பாசிர் ரிஸ் டிரைவ் 3ல்  ஒரு வெள்ளி நிற கார், வியாழக்கிழமை இரவு அன்று சாலையோரத்தில் நிறுத்தப்பட்ட ஆறு வாகனங்களுடன்  மோதியது.

இரவு சுமார் 9.30 மணிக்கு போலிசாருக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கும் விபத்து பற்றிய தகவல் கிடைத்தது.

இந்த விபத்தில் எவரும் காயமடைந்ததாகத் தகவல் வெளிவரவில்லை. போலிசாரின் விசாரணை தொடர்கிறது.