பூமலையில் புதிய மலைத்தொடர் நடைபாதை

பூமலைக்குச் செல்லும் வருகையாளர்கள் இப்போது 350 மீட்டர் நீள நடைபாதை வழியாக நடந்து அம்மலையின் உச்சியை அடையலாம்.

‘மிங்சின் ஃபவுண்டேஷன் ரேம்ப்லர்’ மலைத்தொடர் இன்று பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது.  இங்கு மலையேறிகள் தென்கிழக்காசிய மலைக்காடுகளில் வளரும் தாவரங்களைக் கண்டு ரசிக்கலாம்.

‘கேலம் எக்ஸ்டென்ஷன்’ எனப்படும் விரிவு செய்யப்பட்ட பூமலைப் பகுதியில் இந்த மலைத்தொடர் அமைந்துள்ளது. எட்டு ஹெக்டர் பரப்பளவைக் கொண்டுள்ள இந்தப் பகுதியுடன் மொத்த பூமலையின் பரப்பளவு 82 ஹெக்டராக உள்ளது.