நொறுக்குத் தீனிக்காகப் பெருகும் தேவை

நொறுக்குத் தீனிக்காகப் பெருகும் தேவை

1 mins read
df60c329-1fdc-461d-acfe-47d6b8f07ebd
-

நொறுக்குத் தீனி விரும்பிச் சாப்பிடுபவர்கள் பலர் சிங்கப்பூரில் உள்ளனர். சிங்கப்பூரின் நொறுக்குத் தீனிச் சந்தை இவ்வாண்டு 226.7 மில்லியன் வெள்ளியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்குள்ள ஒவ்வொருவரும் சராசரியாக 3.1 கிலோகிராம் நொறுக்குத் தீனிகளை உண்பர் என்று ஸ்டெஸிஸ்டா ஆய்வு நிறுவனம் தெரிவித்தது. இதுபோன்ற தகவல்களின் அடிப்படையில் உள்ளூர் வியாபாரிகளும் உணவு, பானநிறுவனங்களும் பல்வேறு நூதன, புத்தாக்ககரமிக்க வழிமுறைகளைக் கையாள ஊக்கமடைகின்றனர்.

குறிப்பாக 'லக்சா', டோம் யாம், ரெடாக் ஆகிய சுவைகளில் புதிய வகை நொறுக்குத் தீனிப்பொருட்களை கண்ணைக்கவரும் பொட்டலங்களில் வர்த்தகர்கள் வெளியிடுகின்றனர். புதிய சுவைகள் அனைத்தும் பிரபலமாக இல்லாவிட்டாலும் வாடிக்கையாளர்களைச் சுண்டியிழுக்கும் தெரிவுகள் போதுமான அளவில் உள்ளன. வேறு ஸ்னேக் ஜீனியஸ் போன்ற போட்டிகளில் சமையல் வல்லுநர்கள் ஒருவரோடு ஒருவர் மோதும்போது சில புதிய சுவைகளின் உருவாக்கத்திற்குக் காரணமாகின்றனர். மக்கள் நேசிக்கும் விதமாக இந்தச் சுவைகளைப் பக்குவப்படுத்துவது சவாலாக இருப்பதாக உணவு நிறுவனங்கள் கூறுகின்றன. அத்துடன், புதிய சைவ சுவைகளை உருவாக்கவும் கடின முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூர் மற்றும் ஆசிய சுவைகளைக் கொண்ட இத்தகைய நொறுக்குத் தீனிகளை உள்ளூர்க்காரர்கள் மட்டுமின்றி இங்கு வரும் சுற்றுப்பயணிகளும் விரும்பிச் சாப்பிடுவர் என்று சில உணவு நிறுவனங்கள் நம்புகின்றன. சுற்றுப்பயணிகள் இந்த நொறுக்குத்தீனிகளை அவரவர் தாய்நாடுகளுக்கு எடுத்துச்செல்லும்போது அவை அங்குள்ள நாடுகளில் பிரபலமடையக் கூடும் என்பது இங்குள்ள உணவு தயாரிப்பாளர்களின் கனவு.