பொத்தோங் பாசிரில் நேற்று இலவச சுகாதாரப் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இதில் பொத்தோங் பாசிர் குடியிருப்பாளர்கள் மட்டுமல்லாமல் மற்ற பகுதிகளிலிருந்து வந்த ஏரா ளமான குடியிருப்பாளர்கள் பங் கேற்று தங்களுடைய உடல் ஆரோக்கியத்தை சோதித்துக் கொண்டனர்.
சாட்டா காம்ஹெல்ட் பொத்தோங் பாசிர் மெடிக்கல் சென்டரில் இந்த இலவச சுகாதாரப் பரிசோதனை நடை பெற்றது.
அங்கு வந்தவர்களுக்கு நோயைக் கண்டறியும் சாதனங்கள் விநியோகிக்கப்பட்டன.
நீண்டகால அதிகாரம் வழங் கும் பத்திரப் பதிவு, பராமரிப்புக்கு திட்டமிடல், கலந்துரையாடல், சர்க்கரை அளவு, உயர் ரத்த அழுத்தப் பரிசோதனை, குறை வான கட்டணத்தில் தடுப்பூசி மற்றும் மார்பக புற்றுநோய் சோதனை போன்ற சேவைகளும் அங்கு வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் பொத்ேதாங் பாசிர் தனித் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினரான சீத்தோ யி பின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

