பிரதமர் இன்று ஜகார்த்தா பயணம்

பிரதமர் இன்று ஜகார்த்தா பயணம்

1 mins read

இந்தோனீசியாவின் அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பு ஏற்கும் ஜோக்கோ விடோடோவின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் லீ இன்று ஜகார்த்தா செல்கிறார்.

முன்னதாக அதிபர் ஜோக்கோவுக்கு திரு லீ தனிப்பட்ட முறையில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட தாக பிரதமர் அலுவலக அறிக்கை தெரிவித்தது.

இரு நாடுகளுக்கு இடையே தற்போது நிலவும் சிறந்த நல்லுறவை மேலும் வலுப்படுத்த சிங்கப்பூர் கடப்பாடு கொண்டுள்ளதாகவும் பிரதமர் லீ கூறியிருந்தார்.