ஜூரோங் வெஸ்ட் தொடக்கப்பள்ளியில் மூன்று மீட்டர் மலைப்பாம்பு

ஜூரோங் வெஸ்ட் தொடக்கப்பள்ளிக்கு அருகிலுள்ள வடிகாலுக்குள் ஒரு பாம்பு இருந்ததைக் காட்டும் சில படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

 

பாம்பைக் காட்டும் படங்களும் காணொளிகளும் ஸ்டாம்ப் செய்தித்தளத்திற்குக் கடந்த வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டன. அவற்றில் அந்தப் பாம்பு சுமார் மூன்று மீட்டர் நீளம் உடையது போல காணப்பட்டது.

இந்தப் பாம்பால் பள்ளி மாணவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுமோ என்பது குறித்த கவலையை இணையவாசிகள் சிலர் வெளியிட்டனர். அந்தப் பாம்புக்கு என்னவானது என்பது இப்போது உறுதி செய்யப்படவில்லை.

Loading...
Load next