மலிவுச் சேவை நிறுவனமான ஸ்கூட் தனது செயல்பாடுகளை முனையம் இரண்டிலிருந்து முனையம் ஒன்றுக்கு நாளை (அக்டோபர் 22ஆம் தேதி ) மாற்றவுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் ஸ்கூட்டின் வளர்ச்சிக்கு வகைசெய்வதே இந்த முடிவின் நோக்கம் என்று அந்நிறுவனம் கடந்த வியாழக்கிழமை அறிவித்தது.
ஒன்றாம் முனையத்திலுள்ள ஸ்கூட்டின் பயணப்பதிவு முகப்புகள், புறப்பாடு மாடியிலுள்ள 5 ஆம் வரிசை முதல் 7ஆம் வரிசை வரையில் அமையவுள்ளன.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சீனா, இந்தியா, லாவோஸ், மலேசியா உள்ளிட்ட எட்டு இடங்களுக்குச் செல்லும் விமானச் சேவைகளை ஸ்கூட் தொடங்கியுள்ளது. அடுத்து ஆண்டுக்குள் கூடுதலாக ஒன்பது பயணப்பாதைகளை அறிமுகம் செய்ய திட்டங்கள் இருப்பதாக அவ்விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மலிவுச்சேவை கிளை நிறுவனமான ஸ்கூட், ஜூன் மாதம் 2012ல் செயல்படத் தொடங்கியது.

