குவீன்ஸ்டவுன் பலதுறை மருந்தகத்தில் உள்ள மூப்பியல் மருத்துவத் துறைக்கான அலெக்ஸாண்ட்ரா மருத்துவமனை தனது முதல் செயற்கைக்கோள் மருந்தகத்தை வரும் டிசம்பரில் திறக்கிறது.
அந்த மருந்தகம் மூத்தோருக்கு ஏதுவானதாக இருக்கும்.
செற்கைக்கோள் மருந்தகத்தை நாட விரும்பும் நோயாளிகள் முதலில் குவீன்ஸ்ட்வுன், காமன்வெல்த் எம்ஆர்டி நிலையங்களுக்கு இடையில் உள்ள பலதுறை மருந்தகத்தில் உள்ள பொது மருத்துவரை அணுக வேண்டும்.
மேலும் சிறப்பு மருத்துவரைப் பார்ப்பதற்குச் செலுத்தப்படும் கட்டணத்தைக் காட்டிலும் இங்கு குறைவான கட்டணம் இருக்கும்.
ஞாபகமறதி, பலவீனம், ஊட்டச்சத்துக் குறைவு போன்றவற்றின் நிலைமையை நிர்வகிப்பதற்கும் மூப்பியல் மருத்துவத்துக்கும் ஒரே இடமாக இது விளங்கும். இதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.

