தஞ்சோங் பகார் சாலையில் சண்டை

தஞ்சோங் பகார் சாலையில் சண்டை

1 mins read

தஞ்சோங் பகார் சாலையில் கிட்டத்தட்ட 10 பேர் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஒருவர் கத்தி வைத்திருந்ததாகவும் மற்றொருவரின் காதில் ரத்தம் வடிந்ததாகவும் சின் மின் நாளிதழ் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது. வெள்ளிக்கிழமை விடிகாலை 3 மணி அளவில் நடந்த அந்த சண்டையின் 46 விநாடி காணொளி ஃபேஸ்புக்கில் பரவலாகியுள்ளது.

காணொளியில் மூன்று அல்லது நான்கு பேர் சாலையில் சண்டை போடுகின்றனர். அவர்களை மற்றொரு குழு விரட்டு கிறது. வெள்ளைச் சட்டை அணிந்த ஒருவரும் கறுப்புச் சட்டை அணிந்த மற்றொருவரும் கடுமையாக சண்டை போடு கின்றனர். அதில், வெள்ளைச் சட்டையிலிருப்பவர் தப்பி ஓடும்போது, சாலையின் நடுவே விழுகிறார். ஆயுதம் வைத்திருந்த வேறொருவர் கறுப்பு சட்டையில் இருப்பவரைத் தள்ளி விட்டு, அவர் முன் ஆயுதத்தைக் காட்டுகிறார். கறுப்புச் சட்டைக்காரர் ஓடிவிடுகிறார். சண்டையைப் பார்த்து அங்கு கூடியவர்களில் ஒரு பெண் சென்று அவர்களிடம் சண்டையை நிறுத்துமாறு கூறுகிறார். சண்டை பிறகு நிறுத்தப்படுதிறது.

ஒருவர் கத்தி வைத்திருந்ததாக கூறப்பட்டதாகவும் அதேநேரத்தில் அது பிளாஸ்டிக் கத்தி என்று சிலர் கூறியதாகவும் இரவுநேர பொழுதுபோக்குக்கூடம் ஒன்றின் கணக்காளர் கூறியதாக சின் மின் செய்தி வெளியிட்டிருந்தது.

சம்பவம் குறித்து போலிஸ் விசாரித்து வருகிறது.