'சீனா, அமெரிக்கா இடையே பிரச்சினை நீடித்தால் சிறிய நாடுகள் பாதிக்கப்படும்'

'சீனா, அமெரிக்கா இடையே பிரச்சினை நீடித்தால் சிறிய நாடுகள் பாதிக்கப்படும்'

1 mins read
179db129-cfa0-45c7-88ba-8248632e235a
சீனாவும் அமெரிக்காவும் கூட்டாகப் பணியாற்றி முன்னேற்றம், நிலைத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் கூறினார். படம்: ராய்ட்டர்ஸ் -

அமெரிக்காவும் சீனாவும் உடன்படிக்கையை எட்டவேண்டும் என்றும் அவற்றுக்கு இடையிலான பிரச்சினை நீடித்தால், இவ்விரு நாடுகளைப் பொறுத்தவரை நடுநிலையான கருத்தைக் கொண்டிருக்கும் சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகள் பெரிதும் பாதிக்கப்படும் என்றும் சிங்கப்பூரின் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் கூறியுள்ளார்.

"இரு நாடுகளுடனும் சிங்கப்பூர் தொடர்ந்து வலுவான நட்புறவைக் கொண்டிருக்கும்," என்று பெய்ஜிங்கில் நடைபெறும் பாதுகாப்பு உச்சநிலை மாநாட்டில் இன்று (அக்டோபர் 22) பங்கேற்ற டாக்டர் இங் குறிப்பிட்டார்.

சீனாவும் அமெரிக்காவும் கூட்டாகப் பணியாற்றி முன்னேற்றம், நிலைத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்துவதுடன், பயங்கரவாதம், பருவநிலை மாற்றம் போன்ற பொதுவான பாதுகாப்புச் சவால்களைக் கையாள வேண்டும் என உலக நாடுகள் விரும்புகின்றன என்றும் திரு இங் குறிப்பிட்டுள்ளார்.