2025ஆம் ஆண்டுக்குள் பீஷானில் 1,500 புதிய பிடிஓ வீடுகள்

2025ஆம் ஆண்டுக்குள் பீஷானில் 1,500 புதிய பிடிஓ வீடுகள்

1 mins read
63e0471c-7fd1-4fe0-987d-61087eec6329
-

பீஷான் வட்டாரத்தில் 1,500க்கும் அதிகமான தேவைக்கேற்ப கட்டித்தரப்படும் வீடுகள் (பிடிஓ) 2025ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும்.

இந்தத் திட்டத்தின்படி ஆறு புளோக்குகள் கட்டப்படும். அவை 22 முதல் 39 மாடிகளைக் கொண்டிருக்கும். அத்துடன் அவற்றின் கூரைகளில் தோட்டங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இரண்டு, மூன்று, நான்கு அறைகளைக் கொண்ட மொத்தம் 1,504 வீடுகள் அந்த புளோக்குகளில் இருக்கும்.

குழந்தைப் பராமரிப்பு நிலையம், வட்டாரச் செயற்குழு, கடை, காப்பிக் கடை உள்ளிட்ட சில வசதிகளை இங்கு அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

44,424 சதுர மீட்டர் பரப்பளவிலான இந்த இடம், பீஷான் ஸ்திரீட் 14ல் காலாங் ஆற்றுக்கு அருகே அமையவிருக்கிறது.