'உச்சம் தொட்ட டெங்கி சம்பவங்கள் குறைந்தாலும் விழிப்புநிலை தேவை'

'உச்சம் தொட்ட டெங்கி சம்பவங்கள் குறைந்தாலும் விழிப்புநிலை தேவை'

2 mins read

டெங்கி சம்பவங்களைப் பொறுத்தவரை, ஆக மோசமான நிலவரத்தை சிங்கப்பூர் கடந்து வந்திருக்கலாம். ஆனால், கடந்த வாரம் டெங்கி சம்பவங்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்த நிலையில், இது குறித்த விழிப்புணர்வை அதிகாரிகள் ஏற்படுத்தியுள்ளனர்.

ஜூலை 19ஆம் தேதி முடி

வடைந்த வாரத்திற்கும் அக்டோபர் 12ஆம் தேதி முடிவடைந்த வாரத்திற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில், டெங்கி சம்பவங்களின் எண்ணிக்கை இறக்கம் கண்டு வந்தது. அக்டோபர் 12ஆம் தேதி முடிவடைந்த வாரத்தில் டெங்கி சம்பவங்களின் எண்ணிக்கை 229ஆக குறைந்தது. ஜூலை இரண்டாவது வாரத்தில் பதிவான 664 சம்பவங்களுடன் ஒப்புநோக்க, இந்த எண்ணிக்கை பாதிக்கும் குறைவு.

கடந்த ஜூலை, ஆகஸ்ட்டில் டெங்கித் தொற்று அதிகம் ஏற்பட்ட காலகட்டத்தை சிங்கப்பூர் கடந்துவிட்டதை இது குறிப்பதாக தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.

எனினும், இந்த எண்ணிக்கை குறைந்துவிட்டது என சிங்கப்பூரர்கள் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது என வாரியம் நேற்று கூறியது. ஏனெனில், கடந்த வாரம் டெங்கி சம்பவங்களின் எண்ணிக்கை 239ஆக சற்று கூடியது.

"இவ்வாண்டு இறுதிவாக்கில் ஏடிஸ் எகிப்டி கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதால் விழிப்புநிலை தொடர வேண்டும்.

"இல்லையெனில், கொசுக்களின் எண்ணிக்கை அதிகரித்தால் டெங்கித் தொற்று ஏற்படுவதற்கான அபாயமும் அதிகரிக்கும்," என்று வாரியம் எச்சரித்தது.

கடந்த சனிக்கிழமை நிலவரப்படி, மொத்தம் 13,079 டெங்கி சம்பவங்கள் பதிவாகின. இந்த எண்ணிக்கை மூன்று ஆண்டுகளில் ஆக அதிகம்.

நேற்று முன்-தி-னம் நில-வ-ரப்-படி, கொசு இனப்-பெ-ருக்-கம் ஏற்-ப-டக்-கூ-டிய ஆகப் பெரிய இடம் சுவா சூ காங்-கில் இருந்-தது.