வனவிலங்கு ஆலோசகர் சுபராஜ் காலமானார்

வனவிலங்கு ஆலோசகர் சுபராஜ் காலமானார்

1 mins read

சிங்கப்பூரின் பிரபல வனவிலங்கு ஆலோசகரான சுபராஜ் ராஜதுரை நேற்று காலமானார். இவருக்கு வயது 56.

திரு சுபராஜின் மறைவு குறித்து முன்னாள் தாதியான இவரது மனைவி ஷாம்லா சுபராஜ் நேற்று பிற்பகல் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.

அவரது பதிவைத் தொடர்ந்து இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்களிடமிருந்து அனுதாபங்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

திரு சுபராஜின் மறைவு குறித்து தாம் ஆழ்ந்த வருத்தம் அடைந்திருப்பதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரின் இயற்கையைப் பாதுகாக்க கடந்த 35 ஆண்டு

களாக அரும்பாடுபட்ட திரு சுபராஜுக்கு அமைச்சர் லீ தமது ஃபேஸ்புக் பதிவில் அஞ்சலி செலுத்தினார்.

"காட்டுப்பகுதியில் நீங்கள் சுபராஜை சந்தித்தால், அனைவரது கண்பார்வையிலிருந்து தப்பிய பறவை ஒன்றைக் கையை நீட்டிக்காட்டுவார்.

"இயற்கைக்கும் தமக்கும் இடையே இருக்கக்கூடிய புரிந்துணர்வும் தொடர்புமே அவரது மந்திரம். சுபராஜின் மறைவைத் தொடர்ந்து, அந்த மந்திரத்தை நாம் இழந்துவிட்டோம்," என்று அமைச்சர் லீ பதிவிட்டார்.