கஞ்சா, 'ஐஸ்' உட்பட 2 கிலோ கிராமுக்கும் அதிகமான எடை கொண்ட போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். நேற்று முன்தினமும் நேற்றும் நடத்தப்பட்ட சோதனையில் $223,000 மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியது. அச்சம்பவங்களில் ஒன்றாக, உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் 34 வயது மலேசிய ஆடவர் ஒருவரிடம் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணைய அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த ஆடவர் ஓட்டிய காரின் முன்பகுதியில் 1.041 கிலோகிராம் எடை கொண்ட 'ஐஸ்' மற்றும் 198 'எக்ஸ்டசி' மாத்திரைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
கஞ்சா, 'ஐஸ்' உட்பட $223,000 மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
1 mins read

