இஸ்தானா திடல் இம்மாதம் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளியை முன்னிட்டு காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படும்.
அங்கு விழாக்கால நிகழ்ச்சிகளையும் மேடை கலை நிகழ்ச்சிகளையும் பொதுமக்கள் ரசிக்கலாம். சீன, மலாய் இசைக் கருவிகளின் பாரம்பரிய மற்றும் தற்கால இந்திய இசை நிகழ்ச்சியும் அங்கு அரங்கேறும்.
இஸ்தானாவின் 150 ஆண்டு கால நிறைவைக் குறிக்கும் வகையில் தயாரிக்கப்படும் இஸ்தானா குக்கிஸ் என்ற பலகாரங்களையும் பொதுமக்கள் வாங்கி சுவைத்து உண்ணலாம்.
இஸ்தானாவின் உயிரினங்களைக் கண்டுகளிக்கும் உலாவும் இடம்பெறும். இதுவரை அதிபர்களுக்கும் பிரதமர்களுக்கும் வழங்கப்பட்டு உள்ள அரசாங்க அன்பளிப்புகளையும் பொதுமக்கள் பார்வையிடலாம்.
இஸ்தானாவின் குறிப்பிட்ட சில அறைகளையும் பொதுமக்கள் பார்க்கலாம். இஸ்தானா பூங்கா வில் அமைந்துள்ள இஸ்தானா பாரம்பரிய கலைக்கூடமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்களுக்குத் திறந்திருக்கும்.

