'அஸ்லான் ஃபார்மசூட்டிகல்ஸ்' என்ற உள்ளூர் நிறுவனம் ஒரு புதிய மருந்தை உருவாக்கி வருகிறது. தோல் உரியும் ஒரு வகை நோயிலிருந்து முற்றிலும் நிவாரணம் பெற அந்தப் புதிய மருந்து உதவக் கூடும் என்று நம்பப்படுகிறது.
புதிய மருந்தை முதல் நோயாளியுடன் அந்த நிறுவனம் இப்போது சோதித்து வருகிறது.
இந்தப் பரிசோதனை 50 நோயாளிகளை உள்ளடக்கி நடத்தப்படும். அடுத்த ஆண்டு பிற்பாதியில் முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய மருந்துக்கு 'அஸ்லான்004' என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் அந்த மருந்தைக் கண்டு பிடித்தனர். அந்த மருந்து தேசிய தோல் நிலையத்துடன் சேர்ந்து இங்கு உருவாக்கப்பட்டு வருகிறது.
சிங்கப்பூரில் ஆற்றல் வளங்கள் இருப்பதால் அந்த மருந்தை இங்கு உருவாக்க முடிவு செய்ததாக இந்த மருந்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கார்ல் ஃபிர்த் தெரிவித்தார்.

