காத்தோங்கில் 37 குடும்பங்கள் வெளியேற உத்தரவு

காத்தோங்கில் 37 குடும்பங்கள் வெளியேற உத்தரவு

1 mins read

காத்தோங்கில் உள்ள ஒரு குடியிருப்புப் பேட்டையில் இருக்கும் வீடுகளில் பெரிய அளவில் புதுப்பிப்பு மற்றும் பழுதுபார்ப்பு வேலைகளை மேற்கொள்ள வேண்டி இருப்பதால் அந்தப் பேட்டையில் வசிக்கும் 37 குடும்பங்களும் அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் வெளியேறிவிட வேண்டும் என்று சிங்கப்பூர் நில ஆணையம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

ஹேக் ரோடு அருகே உள்ள ஜாலான் பிஞ்சாய், ஜாலான் காஜுஸ், ஜாலான் தெம்புசு, ஜாலான் பெரிஞ்சின் ஆகியவற்றில் இருக்கும் 42 இரண்டு மாடி வரிசை வீடுகளும் 1950களில் கட்டப்பட்டன.

அரசுக்குச் சொந்தமான அந்த வீடுகள், ஏலத்தில் அதிக வாடகைக்கு எடுக்க முன்வரும் மக்களுக்கு கொடுக்கப்பட்டன.