சிங்கப்பூரில் நான்காவது தொழில் புரட்சி செயல்திட்டங்களைக் கைக்கொள்வதில் கணினிச் சில்லு தயாரிப்பு நிறுவனங்களும் மருந்து தொழில்துறை நிறுவனங்களும் முன்னணியில் இருக்கின்றன என்று பொருளியல் வளர்ச்சிக் கழகம் நேற்று அறிவித்தது.
இந்தக் கழகம் அறிவார்ந்த தொழில்துறை ஆயத்தநிலை அட்டவணையை உருவாக்கி இருக்கிறது.
அந்த அட்டவணை முக்கியமான 12 தொழில்துறைகளை உள்ளடக்கிய 200 நிறுவனங்களைச் சேர்ந்த புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
அந்த நிறுவனங்கள் 2018 மார்ச் முதல் 2019 ஆகஸ்ட் வரை மதிப்பிடப்பட்டன. தொழில்துறை உருமாற்றத்தில் எந்த அளவுக்கு முன்னேற்றம் சாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை அட்டவணை ஆராய்ந்தது.

