ஆகாய டாக்சி சோதனை ஓட்டம்

ஆகாய டாக்சி சோதனை ஓட்டம்

1 mins read
5c411154-61e3-4070-b35b-ba1c0b860a82
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

'வோலோகாப்டர் 2X' என்ற இந்த ஆகாய டாக்சி மரினா பே வட்டாரத்தில் நேற்று நண்பகல் நேரத்தில் சோதனையோட்டம் கண்டது. போக்குவரத்து அமைச்சு, சிங்கப்பூர் பொது விமானப் போக்குவரத்து ஆணையம், ஜெர்மனியின் வோலோகாப்டர் நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இந்த ஆகாய டாக்சி உருவாகியுள்ளது. சன்டெக் சிங்கப்பூர் மாநாட்டு, கண்காட்சி மையத்தில் நேற்று முன்தினம் தொடங்கி, நாளை மறுநாள் வரை நடக்கவிருக்கும் அறிவார்ந்த போக்குவரத்துச் சாதனங்கள் உலக காங்கிரசின் ஓர் அங்கமாக இந்த ஆகாய டாக்சியின் மூன்று நிமிட சோதனையோட்டம் இடம்பெற்றது. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்