சிங்கப்பூரின் பொருளியல் விரைவில் மீட்சி அடையலாம்

சிங்கப்பூரின் பொருளியல் விரைவில் மீட்சி அடையலாம்

1 mins read
84e63f23-9167-43ed-baef-95e590b557c8
-

சிங்கப்பூரின் பொருளியல் மந்தத்திலிருந்து விரைவில் மீட்சி அடைய மேலும் சில காலாண்டுகள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில், உற்பத்தித் துறைகளில் ஏற்பட்டுள்ள மந்தநிலை மற்ற துறைகளுக்கு அதிகம் பரவாதது இதற்குக் காரணம் என்று சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் தலைவர் ரவி மேனன் தெரிவித்தார்.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் வர்த்தகப் போர் நிலவுகையில், ஏற்றுமதிகளைச் சார்ந்துள்ள சிங்கப்பூரின் பொருளியல் இவ்வாண்டின் பிற்பகுதியில் இறக்கம் கண்டுள்ளது. அவ்விரு வல்லரசுகளும் சிங்கப்பூரின் முக்கிய வர்த்தகப் பங்காளிகளாக உள்ளன.

இவ்வாண்டின் வளர்ச்சி விழுக்காடு முன்னுரைப்பு 0-1 விழுக்காட்டுக்கு இடையே இருக்கும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் எதிர்பார்க்கிறது. 2020ல் அது மிதமான அளவில் முன்னேறும் என்றும் கூறப்படுகிறது.

இது அவ்வளவு வலுவான மீட்சியாக இருக்கப்போவதில்லை என்று திரு மேனன் தெரிவித்தார். இருந்தபோதும், சிங்கப்பூரால் செயலாற்றக்கூடிய வளர்ச்சிக்கும் உண்மையான வளர்ச்சிக்கும் இடையிலான இடைவெளி மேலும் அதிகமாகாது எனக் கருதப்படுகிறது.