இவ்வாண்டு நவம்பர் மாதம் மொத்தம் 1.4 மில்லியன் சிங்கப்பூரர்கள் இருநூற்றாண்டு நிறைவு போனஸின் மூன்று விதமான அனுகூலங்களை அடைவர். பொருள் சேவை வரி பற்றுச்சீட்டு, ரொக்கம் ஆகியவை அவர்களுக்கு வழங்கப்படுவதுடன் அவர்களது மத்திய சேமநிதி கணக்கிலுள்ள தொகையும் அதிகரிக்கப்படும்.
சிங்கப்பூர் நிறுவப்பட்டு இருநூறு ஆண்டுகள் நிறைவடைந்ததை அனுசரிப்பதற்காகவும் உதவி தேவைப்படும் தனிநபர்களுக்கு உதவி அளிப்பதற்காகவும் அந்த போனஸை அரசாங்கம், இவ்வாண்டு வரவு செலவுத் திட்டத்தின்போது அறிவித்தது. போனஸின் மதிப்பு மொத்தம் 1.1 பில்லியன் வெள்ளி.
ரொக்க போனஸ், வொர்க்ஃபேர் இருநூற்றாண்டு போனஸ் ஆகியவற்றின் விவரங்கள் குறுந்தகவல்வழி அனுப்பப்படும். வொர்க்ஃபேர் இருநூற்றாண்டு போனஸ், மத்திய சேமநிதி திட்டம் ஆகியவற்றுக்கான கடிதம், அவற்றுக்குத் தகுதிபெறுவோருக்கு நவம்பர் மாதம் அனுப்பி வைக்கப்படும்.

