நண்டு பிடிக்க கருவி பொருத்தி சர்ச்சையில் சிக்கிய உணவகம்

நண்டு பிடிக்க கருவி பொருத்தி சர்ச்சையில் சிக்கிய உணவகம்

1 mins read
e7779d26-3367-49f5-9178-ca62e034baba
-

நண்டு பிடிக்கும் கருவியைப் பொருத்தி சிக்கலில் மாட்டிக் கொண்டது பொங்கோலில் அமைந்துள்ள 'ஹவுஸ் ஆஃப் சீஃபுட்' எனும் கடல் உணவுக்கடை.

இலங்கையில் இருந்து தருவிக்கப்பட்ட நண்டுகளை வாடிக்கையாளர்களே உயிருடன் பிடித்து சமைக்கத் தரும் வகையில் அண்மையில் அக்கருவியைப் பொருத்தியது அந்த உணவகம். ஒவ்வொரு முறை நண்டு பிடிக்கவும் $5 கட்டணம்.

இதன் தொடர்பில் அந்த உணவகம் வெளியிட்ட பதிவு, சிங்கப்பூர் விலங்குத் துன்புறுத்தல் தடுப்புச் சங்கத்தின் (எஸ்பிசிஏ) கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

"மனிதர்களின் கேளிக்கைக்காக விலங்குகளைத் துன்புறுத்தும் இந்தக் கருவி உடனே அகற்றப்பட வேண்டும். இதுகுறித்து விலங்குநல மருத்துவச் சேவைப் பிரிவுக்குப் புகார் அளித்துள்ளோம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம்," என்று அச்சங்கத்தின் செயல்பாட்டு இயக்குநர் ஜெய்பால் சிங் கில் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

நண்டுபிடிக்க கருவி பொருத்தப்பட்டது சிங்கப்பூரில் இதுவே முதல்முறை என நம்பப்படுகிறது.

ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட இதுகுறித்த காணொளி 100,000 முறைக்கு மேல் பகிரப்பட்டது. இணையவாசிகள் பலரும் இச்செயலைக் கண்டித்துள்ளர்.