கார் மீது மோதிய காட்டுப் பன்றி

கார் மீது மோதிய காட்டுப் பன்றி

1 mins read

அப்பர் புக்கிட் தீமா சாலையில் காட்டுப் பன்றி ஒன்று கார் மீது மோதி திடீரென வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இந்தச் சம்பவம் அக்டோபர் 13ஆம் தேதி பிற்பகல் 1.45 மணிக்கு நடந்தது. சம்பவத்தின்போது அந்த வெள்ளை நிறக் காருக்குள் இருந்த மிஷல் என்பவர், காட்டுப் பன்றி மோதியது குறித்து 'ஸ்டோம்ப்' ஊடகத்தில் தெரிவித்திருந்தார்.

"காரை முட்டிய அந்தக் காட்டுப் பன்றி உடனே கீழே விழுந்தபோதும் இரண்டு வினாடிகளுக்குள் எழுந்து நின்று மீண்டும் வனப்பகுதிக்குள் ஓடியது. சேதமடைந்த காரைப் பழுதுபார்க்க 1,241 வெள்ளி செலவானது," என்று மிஷல் கூறினார்.

இது போன்ற ஆபத்து குறித்து விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டுமென தாம் விரும்புவதாக மிஷல் தெரிவித்தார். "காருக்குப் பதிலாக இந்தப் பன்றி, பாத சாரியையோ அல்லது மோட்டார் சைக்கிளோட்டியையோ மோதியிருந்தால் விளைவுகள் மிகவும் மோசமாக இருந்திருக்கும்," என்றார் அவர்.