தானாக இயங்கும் வாகனங்களால் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்கு முழுமையாக தீர்வு காண முடியாது என்று போக்குவரத்து துறை நிபுணர்கள் கூறியுள்ளனர்.
26வது நுண்ணறிவு போக்குவரத்து மாநாட்டில் உரையாற்றிய அவர்கள், போக்குவரத்து நெரிசல் அல்லது விபத்துகள் ஏற்படுவதைக் குறைக்க முடியும், ஆனால் ஓட்டுநர் இல்லா வாகனங்களால் முழுமையான தீர்வு காண முடியாது என்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நியூசிலாந்தின் 'ஓமியோ' எனும் ஓட்டுநர் இல்லா வாகனச் சேவையின் ஆய்வு உருவாக்கத் தலைவரான டாக்டர் மஹ்மூட் ஹிமெட், இக்கட்டான சூழ்நிலைகளைத் தானியக்க வாகனங்கள் கையாள வேண்டியிருக்கிறது என்றார்.
அமெரிக்க பொறியியல் நிறுவனமான மைக்கல் பேக்கரைச் சேர்ந்த மால்கம் டஃப்ஹெர்டி, தானியக்க வாகனங்கள் குறித்த நேரத்தில் செயல்படவில்லை யென்றால் நெரிசல் ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாகத் தெரிவித்தார்.

