கிராஞ்சி விரைவுச்சாலையில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். லாரியால் மோதப்பட்டு மாண்ட சைக்கிளோட்டிக்கு 48 வயது. தீவு விரைவுச் சாலையை நோக்கிச் செல்லும் கிராஞ்சி விரைவுச் சாலையில் நிகழ்ந்த அந்த விபத்து பற்றி நேற்று காலை 7.26 மணிக்கு போலிசாருக்குத் தகவல் கிடைத்தது. விபத்தைக் காட்டும் சில காணொளிகள் 'ஸ்டோம்ப்' செய்தித் தளத்தில் பதிவேற்றப்பட்டன. சம்பந்தப்பட்ட லாரி ஓட்டுநர் விசாரணைக்கு உதவி வருவதாகக் கூறப்படுகிறது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி மரணம்
1 mins read

