தானியங்கி பேருந்துகளை இயக்க ஓட்டுநர்களுக்குப் பயிற்சி

தானியங்கி பேருந்துகளை இயக்க ஓட்டுநர்களுக்குப் பயிற்சி

1 mins read

சிங்கப்பூரில் தானியங்கி வாகனங்கள் இயங்குவது சாத்தியமாகலாம் என்பதால், அவற்றைக் கையாள பொதுப் பேருந்து ஓட்டுநர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

கிட்டத்தட்ட 100 பொதுப் பேருந்து ஓட்டுநர்கள் முதற் கட்டமாக பயிற்சி பெறுவார்கள். தானியங்கித் தொழில்நுட்பம் மேம்பட்டு வருவதால் அதிக ஓட்டுநர்கள் தொடர்ந்து படிப்படியாக பயிற்சி பெறுவார்கள் என்று நிலப்போக்குவரத்து ஆணையம் நேற்றுத் தெரிவித்தது.

நிலப்போக்குவரத்து ஆணையத்துக்கும் தானியங்கி வாகன தொழில் துறை பங்காளிகளான தேசிய போக்குவரத்து ஊழியர் சங்கம், எஸ்டி என்ஜினியரிங், எஸ்பிஎஸ டிரான்சிட், எஸ்எம்ஆர்டி பேருந்துகள், டவர் டிரான்சிட் சிங்கப்பூர், கோ-எகேட் சிங்கப்பூர், சிங்கப்பூர் ஊழியரணி, வேலைவாய்ப்பு வேலைத்திறன் பயிற்சிக்கழகம் ஆகியவற்றுக்கும் இடையே கையெழுத்தான உடன்பாட்டின் விளைவாக இந்தப் பயிற்சி சாத்தியமாகி உள்ளது.

ஓட்டுநர்களுக்கான பயிற்சித் திட்டங்களை தொழில் துறை பங்காளிகளுடன் இணைந்து ஆணையம் உருவாக்கும்

புதிய பணியான தானியங்கி பேருந்துக்கான பாதுகாப்பு கண்காணிப்பாளர் பணிக்கு ஓட்டுநர்கள் பயிற்சி பெறாலாம்.

தேவை ஏற்பட்டால், பாதுகாப்பு கண்காணிப்பாளர் உடனே வாகனத்தைக் கட்டுப்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், தானியங்கி பேருந்துகளின் செயல்பாட்டைக் கண்காணிக்கவும் அவர்கள் பயிற்றுவிக்கப்படுவர்.