புத்தாக்கமிக்க பல்கலைக்கழகங்கள் பட்டியலில் என்யுஎஸ், என்டியு

புத்தாக்கமிக்க பல்கலைக்கழகங்கள் பட்டியலில் என்யுஎஸ், என்டியு

1 mins read

ராய்ட்டர்ஸ் வெளியிட்ட உயர்கல்வி நிலையத் தரவரிசையில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும் (என்யுஎஸ்) நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் (என்டியு) உலகின் புத்தாக்கம் மிகுந்த பல்கலைக்கழகங்கள் தரநிலையில் உயர்ந்துள்ளன.

என்யுஎஸ் ஐந்து நிலைகள் உயர்ந்து 58வது இடத்திற்கு வந்துள்ளது. புத்தாக்கத்தில் சிறந்த 100 உலகப் பல்கலைக்கழ கங்கள் பட்டியலில் முதல் முறையாக இடம்பெற்றுள்ள என்டியு 67வது நிலையில் வந்துள்ளது.

அறிவியலில் மேம்படவும் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிக்கவும் புதிய சந்தைகள், தொழில்துறை களைக் கைக்கொள்ளவும் அதிகம் செயலாற்றும் பல்கலைக்கழ கங்களை உலகின் தலைசிறந்த புத்தாக்கமிக்க பல்கலைக்கழகங்கள் பட்டியல் வரிசைப்படுத்துகிறது. அமெரிக்காவின் ஸ்டாம்ஃபர்ட் பல்கலைக்கழகம் இப்பட்டியலின் முதல் இடத்தில் உள்ளது.