புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி ரயில்களின் மறுசீரமைப்புப் பணிகள் திட்டமிட்டபடி நடைபெறுகின்றன

புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி ரயில்களின் மறுசீரமைப்புப் பணிகள் திட்டமிட்டபடி நடைபெறுகின்றன

2 mins read

புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் திட்டத்தின் (எல்ஆர்டி) புதுப்பிப்புப் பணிகள் வரும் 2024ஆம் ஆண்டில் திட்டமிட்டபடி நிறைவுபெற்று விடும் என்று நிலப் போக்குவரத்து ஆணையமும் எஸ்எம்ஆர்டி நிறுவனமும் கூட்டாக அறிவித்துள்ளன.

எஸ்எம்ஆர்டி நிறுவனம் தனது பழுதுபார்ப்புப் பணிகளைத் தீவிரப்படுத்திய பிறகு இந்த இலகு ரயில் திட்டத்தின் செயல்பாடுகள் அதிக நம்பகத்தன்மையைப் பெற்று உள்ளன என்றும் இவ்விரு அமைப்பு

களும் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தன.

கடந்த ஆண்டு மார்ச் மாதத் தில் அரசாங்கம், பிரச்சினை கொடுக்கும் புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி முறைக்கு $344 மில்லியன் மதிப்பிலான முழுமையான புதுப்பிப்பிப்புப் பணிகளுக்கான விவரங் களை அறிவித்தது.

புதிய சமிக்ஞை முறையும் புதிய ரயில்களும் 2022ஆம் ஆண்டு செயல்படத் தொடங்கும் என்றும் தண்டவாள மின்சார விநியோக முறையும் தண்டவாளத்தின் பழைய சமிக்ஞை முறையும் 2024ஆம் ஆண்டில் நிறைவுபெற்று விடும் என்றும் அரசாங்கம் மேலும் கூறியது.

புதிய தொடர்பு சார்பிலான ரயில் கட்டுபாட்டு சமிக்ஞை முறையைப் பொருத்தும் பணிகள் இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் வெளிநாட்டில் தொடங்கின என் றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டியின் செயல்முறை

களில் எஸ்எம்ஆர்டி சில மாற்றங்களைச் செய்யும்.

வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல், எல்ஆர்டி ரயில்கள் உச்ச நேரமற்ற காலத்தில் 'சேவை B' பெட்டிர் நிலையம் வழியாக மட்டும் இயங்கும். தற்போது அந்த ரயில் கள் எல்லா நேரங்களிலும் இரு திசைகளிலும் இயங்குகின்றன.

காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரையிலும் இரவு 8 மணி முதல் நள்ளிரவு வரையிலும் வார இறுதி நாட்களிலும் பொது விடுமுறைகளிலும் உச்சநேரமற்ற காலமாகக் கூறப்படுகிறது.

புக்கிட் பாஞ்சாங்குக்கும் சுவா சூ காங்குக்கும் இடைப்பட்ட இணைப்பை வலுப்படுத்தும் வகையில் தற்போதைய உச்சநேர சேவையான BPS1, நவம்பர் மாதம் 10ஆம் தேதி முதல் முழு நேர சேவை 976ஆக மாற்றப்படும்.

இந்தப் புதிய சேவை புக்கிட் பாஞ்சாங் ரிங் ரோடு நெடுகே உள்ள பள்ளிகள், தொழில்நுட்பக் கல்விக் கழக மேற்கு கல்லூரி, விரைவில் கட்டப்படவிருக்கும் பலதுறை மருந்தகம், செஞ்சா ரோட்டில் உள்ள உணவங்காடி நிலையம் போன்ற இதர வசதிகளின் இணைப்பை மேம்படுத்தும் என்றும் நிலப் போக்குவரத்து ஆணையமும் எஸ்எம்ஆர்டி நிறுவனமும் கூறின.

பொதுமக்களுக்கு இந்த மாற் றங்கள் பற்றி தெரிவிக்க எல்லா எல்ஆர்டி நிலையங்களிலும் அறி விப்புகள் செய்யப்படும் என்றும் பயணிகளுக்கு உதவ கூடுதல் ஊழியர்கள் பணியில் அமர்த்தப் படுவர் என்றும் கூறப்பட்டது.