செல்லப்பிராணித் துறையின் தரத்தை உயர்த்த பொதுமக்களின் கருத்துகள் நாடப்படுகின்றன

செல்லப்பிராணித் துறையின் தரத்தை உயர்த்த பொதுமக்களின் கருத்துகள் நாடப்படுகின்றன

2 mins read
295fbcaa-7b60-44b9-a7c4-07b28be91ddd
செல்லப் பிராணியை வளர்ப்பவர்கள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கான தங்கு விடுதிகளை நடத்துவோர் ஆகியோரின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று ஆய்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

செல்லப்பிராணித் துறையின் தரத்தை உயர்த்தும் யோசனைகளையும் கருத்துகளையும் பொதுமக்கள் நேற்று தொடங்கப்பட்டுள்ள பொது கருத்தாய்வில் தெரிவிக்கலாம் என்று தேசிய பூங்காக் கழகம் தெரிவித்துள்ளது.

இரண்டு மாதங்களுக்கு அதா வது டிசம்பர் மாதம் 26ஆம் தேதி வரை நீடிக்கும் இந்தக் கருத்தாய்வில் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை இணைய ஆய்வு மூலமாகவும் தீவெங்கும் நடத்தப்படும் கண்காட்சிகள் மூலமாகவும் தெரிவிக்கலாம்.

உள்துறை, தேசிய வளர்ச்சி அமைச்சுகளின் மூத்த நாடாளுமன் றச் செயலாளர் சுன் சூலிங், "தேசிய பூங்காக் கழகம் செல்லப்பிராணித் துறையின் தரங்களை மறுஆய்வு செய்து, கடுமையாக்கும். அதன் மூலம் விலங்குச் சுகாதாரமும் நல்வாழ்வும் பாதுகாக்கப்படும்," என்று கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கூறினார்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தேசிய பூங்காக் கழகம் பல்வேறு பங்குதாரர்களுடன் குவி நோக்கு கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது.

அதில் பங்கேற்றோர் மூலம் காணாமல் போகும் செல்லப்பிராணிகளைக் கண்டுபிடித்தல், செல்லப்பிராணியை வளர்ப்பவர்கள் மற்றும் செல்லப்பிராணி

களுக்கான தங்கு விடுதிகளை நடத்துவோர் ஆகியோரின் தரத்தை உயர்த்துதல் ஆகியவை பற்றி கலந்தாலோசிக்கப்பட்டன என்றும் தேசிய பூங்காக் கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

இந்த குவிநோக்கு கலந்துரை யாடல்களில், செல்லப் பிராணியை வளர்ப்பவர்கள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கான தங்கு விடுதி களை நடத்துவோர் ஆகியோரின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று பெரும்பாலோர் தெரிவித்தனர் என் றும் அறிக்கை கூறியது.

செல்லப் பிராணி வளர்ப்பவர் கள் தங்கள் பிராணிகளுக்கு உரிமம் பெற ஊக்குவிக்க நடவடிக் கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் செல்லப் பிராணிகளாக இருக்கும் தங்கள் பூனைகளுக்குள்ளும் நாய்களுக்குள்ளும்

நுண்ணிய சில்லுகளைப் பொருத்த பொதுவான பதிவகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் பங்கேற்பாளர்கள் யோசனை தெரிவித்தனர்.

"சம்பந்தப்பட்ட பங்குதாரர்களி டமிருந்து கருத்துகளைப் பெற்று விட்டோம். அடுத்து பொதுமக்கள் கூறும் கருத்துகளைச் சேகரிக்க ஆவலாக இருக்கிறோம்," என்று தேசிய பூங்காக் கழகம் அறிக்கை யில் கூறியது.