நம்பிக்கையுடன் முன்னேறும் நமது சமூகங்கள்: ஹெங்

நம்பிக்கையுடன் முன்னேறும் நமது சமூகங்கள்: ஹெங்

1 mins read

நமது சமூகங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தொடர்ந்து முன் னேறி வருகிறது என்றும் இதன் மூலம் நம்பிக்கையுடன் நாம் நமது எதிர்காலத்தை வகுக்கலாம் என்றும் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார்.

இணைப் பேராசிரியர்கள் எஸ் வாசு, பில்வீர் சிங் இருவரது நூல் வெளியீட்டு விழாவில் நேற்று முன்தினம் பங்கேற்ற திரு ஹெங், "ஆசிய நிதி நெருக்கடி, சார்ஸ் நோய் பரவல், உலக நிதி நெருக் கடி என சிங்கப்பூர் சந்தித்த சவால்களில் ஒன்றுசேர்ந்து செயல்பட்ட நமது ஒற்றுமை உணர்வு அவற்றைச் சமாளிக்க உதவியது.

"எதிர்காலத்தில் இடையூறு ஏற்படுத்தும் மாற்றங்கள் வரும் போது நமது பங்காளித்துவ உற வுகள் அவற்றை எதிர்கொள்ள நமக்கு உறுதுணையாக இருக் கும்," என்றும் திரு ஹெங் விவ ரித்தார்.

பல்கலைக்கழக நகரில் உள்ள நீ ஆன் கொங்சீ அரங்கில் நடை பெற்ற நூல் வெளியீட்டு விழாவில் இரு பேராசிரியர்களின் குடும்பத் தினர், முன்னாள் அரசியல்வாதி கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.