தீபாவளியை முன்னிட்டு இஸ்தானா பொது வரவேற்பு தினம்

தீபாவளியை முன்னிட்டு இஸ்தானா பொது வரவேற்பு தினம்

1 mins read

தீபாவளி பொது விடுமுறையை முன்னிட்டு, இஸ்தானா அதிபர் மாளிகை வளாகம் இன்று காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்களுக்குத் திறந்து விடப்படும்.

அங்கு நடைபெறும் அங்கங்களில் ஒன்று 'சங்கர் சிம்ப னிஸ்'. அக்குழுவின் கலைஞர்கள் 'சிலம்டோக் மில்லிய னேர்' திரைப்படத்தின் பாடல்களை வெவ்வேறு இந்திய துணை மொழிகளில் பாடுவார்கள். மக்கள் கழகத்தின் சிங்கப்பூர் இந்திய இசைக்குழு மற்றும் பாடகர் குழு இந்திய, மலாய், சீன இசைக் கருவிகளைக் கொண்டு பாரம்பரிய மற்றும் சமகால பாடல்களைப் பாடுவார்கள்.

இஸ்தானா வளாகத்துக்குள் செல்ல சிங்கப்பூரர்களுக்கும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகளுக்கும் அனுமதி இலவசம். மற்ற வர்கள் $2 கட்டணம் செலுத்த வேண்டும்.