பொறுப்பற்ற வாகனமோட்டிகளுக்கு எதிராக கடுமையான தண்டனைகள்

பொறுப்பற்ற வாகனமோட்டிகளுக்கு எதிராக கடுமையான தண்டனைகள்

1 mins read
2bd52ce8-476a-4094-aeed-4f3bc1c01ac8
போக்குவரத்து போலிஸ் அதிகாரி ஒருவர் தமது 'லேசர்கேமரா' மூலம் வாகனங்களின் வேகத்தைக் கண் காணிக்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஆபத்தான முறையில் வாகனமோட்டு வோருக்கு எதிராக நவம்பர் மாதம் முதல் கடுமையான தண்டனை விதிக்கப்படும். அண்மையில் திருத்தம் செய்யப் பட்ட சாலைப்

போக்குவரத்து சட்டத்தின் மூலம் இது நடைமுறைப் படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

சட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களின்படி அடுத்த ஆண்டு பிற்பாதி முதல், ஆபத்தான முறையில் ஓட்டும் வாகனமோட்டிகளின் வாகனமோட்டும் உரிமம் தற்காலிக மாக ரத்து செய்யப்படும் அல்லது நிரந்தரமாக ரத்து செய்யப்படலாம் என்று உள்துறை அமைச்சு நேற்று முன்தினம் கூறியது.

பொறுப்பற்ற வாகனமோட்டிகளால் விளையும் பாதிப்பு களைப் பொறுத்து அவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனை யும் வேறுபடும். மரணம் விளைவித்தல், கடுமையான காயங்களை விளைவித்தல், காயம் மற்றும் உயிருக்கு ஆபத்தை விளைவித்தல் என பாதிப்புகளின் கடுமை வகைப்படுத்தப்பட்டுள்ளது.

உதாரணத்துக்கு, ஆபத்தான முறையில் மீண்டும் மீண் டும் வாகனமோட்டி மரணத்தை விளைவிப்போருக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். இப்போது அதற்கான தண்டனை ஐந்து ஆண்டுகள் சிறை என்று இருக்கிறது.

இன்னும் கூடுதலாக, முதல் முறை அல்லது மீண்டும் குற்றம் புரிவோருக்கு வாகனமோட்டுவதற்கு உடனடியாக தற்காலிக தடையும் வாகனத்தை பறிமுதல் செய்வதும் அல்லது பத்து ஆண்டுகளுக்கு வாகனமோட்ட தடையும் விதிக்கப்படலாம்.

சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு குற்றம் இழைப் போருக்கு எதிராக தண்டனை கடுமையாக்கப்பட்டிருப்பதால், பொறுப்பற்ற வாகனமோட்டிகள் தங்கள் நிலையை உணர்ந்து முறையாகச் செயல்பட்டால் சாலைகள் பாதுகாப்பானதாக இருக்கும் என்று உள்துறை அமைச்சு கூறியது.